Sunday, August 18, 2013

லீடர் - Leader (2010) தெலுங்கு திரைப்படம் என் பார்வையில்.





கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு படம் - முழுப்படமும் யு-ட்யூபிலேயே கிடைத்தது (சப்டைட்டிலுடன் - நல்ல பிரிண்ட்டு !!!!)

திரைப்பட குழு
இயக்குனர்    - சேகர்   கம்முல. 
தயாரிப்பு     -  ஏ.வி. எம்.
நடிப்பு        -  ராணா டக்குபாதி
                ரிச்சா
                ப்ரியா ஆனந்த்
                சுமன்
                கோட்டா சீனிவாசராவ்
                சுப்புராஜ்
                சுஹாசினி
இசை         - மிக்கி  J மேயர்
ஒளிப்பதிவு    - விஜய் C . குமார்  


நக்சலைட்டுகள் ஆந்திராவின் முதலமைச்சர் (சஞ்சீவ்வய்யாவை)   சுமனை குண்டு வைத்து கொலைசெய்ய முயற்சி செய்கிறார்கள். சஞ்சீவ்வய்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க படுகிறார், சுஹாசினி சஞ்சீவ்வய்யாவின் மனைவி, முதலமைச்சர் சஞ்சீவ்வய்யாவின்  மகன்    (ராணா டக்குபாதி  - வெங்கடேஷ் டக்குபாதி  அண்ணன் மகன்) அர்ஜுன் பிரசாத் - அமெரிக்காவில் டாக்டர் பட்டம் பெற்று ஒரு பெரிய கம்பெனியை நடத்துபவர். அப்பாவை மரணப் படுக்கையில் காண இந்தியா விரைகிறார். சஞ்சீவ்வய்யா தான் இறக்கும்போது, அர்ஜுனிடம் நீதான் அடுத்த முதலமைச்சர் ஆக வேண்டும் என்று தன் கடைசி ஆசையை சொல்லி விட்டு இறந்து போகிறார்.
ஆட்சியில் உள்ள சாதிக்கட்சியின் தலைவர் பெத்தைனா-வாக கோட்டா சீனிவாசராவ். இவர்தான் ஆந்த்ராவின் கிங் மேக்கர். சுமன் இறந்துவிட்டதால் ஆட்சி கலையாமல் இருக்க, பல்வேறு கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, சுமனின் மற்றொரு உறவினரான சுப்புராஜ் (இவர்தாங்க வில்லன் ) என்பவரை முதல்வராக்க முடிவெடுக்கிறார். பெத்தைனாவுக்கு சுமனின் கடைசி ஆசை அப்போது தெரியாது
சுமனின் இறுதி சடங்கில் அர்ஜுனை சந்திக்கும் பல பெரும்புள்ளிகள், முதலமைச்சர் என்னிடம் கொஞ்சம் பணம் கொடுத்து வைத்துள்ளார் என்று பெரிய பெரிய தொகையாக சொல்கின்றனர். சுமனின் டைரிக்குறிப்பு ஒன்றில் ஒரு வீட்டை பற்றி எழுதியிருக்க, அங்கு சென்று பார்க்கும் அர்ஜுனுக்கு பெரும் அதிர்ச்சி, அங்கே கட்டு கட்டாக அறை முழுவதும் பணம் (நம்ம அருணாச்சலம் படத்துல வந்த மொத்த பணத்தையும் இங்க கொண்டு வந்துட்டாங்க).

இதுநாள் வரை நல்லவர் என்று நினைத்திருந்த தன் தந்தையும், ஒரு சராசரி லஞ்ச அரசியல்வாதி என்று தெரிந்து அதிர்ச்சி அடைகிறார். இந்த எடத்துல நம்ம ஹீரோவின் மனசை மாத்துறா மாதிரி ஒரு பாட்டு . மக்களின் பல அவலங்களை படம் பிடித்து காட்டுகிறார்கள்.




இறுதியில் ஹீரோ அர்ஜுன் தானே முதலமைச்சர் ஆவது என முடிவு செய்தது தன்னிச்சையாக (பெத்தைனாவுக்கு தெரியாமல்) காரியத்தில் இறங்குகிறார். மற்றொருபுறம் சுப்புராஜை முதலைமச்சர் ஆக்க கட்சி பணிகளும் செய்யப்படுகிறது. அர்ஜுன், சுமன் சம்பாதித்து (கொள்ளையடித்து) சென்ற பல்லாயிரம் கோடி( 1,00,00,00,00,000 தோராயமா இத்தினி ரூபா) ரூபாயை வைத்து எப்படி சதி செய்து ஆட்சியில் அமர்கிறார் என்பது தான் முதல் பாதி படத்தின் கதை.

ஆட்சிக்கு வரும் ரானாவிற்கு சுப்புராஜ் குடைச்சல் குடுக்க, அதை எப்படி சமாளிக்கிறார் என்பதும், நாட்டை நல்வழி படுத்த என்னென்ன செய்கிறார் என்பதையும் இந்த கால கட்ட அரசியலுக்கு ஏத்தார் போல் (மனதில் வைத்துக்கொண்டு) விறுவிறுப்பாக ரசிக்கும்படி திரைக்கதை அமைத்து வெள்ளித்திரையில் தூள் செய்திருக்கிறார் டைரக்டர் சேகர் கம்முலா. படம் கிட்டத்தட்ட முதல்வன் கொஞ்சம் சிவாஜி கொஞ்சம் என ஷங்கர் ஸ்டைலில் அமைந்திருக்கிறது. இளைஞர்களும், படித்தவர்களும் அரசியலுக்கு வருவேண்டும் என்பதே படத்தின் பிரதான மெசேஜ்.

என் மனதை மிகவும் பதித்த / பிடித்த   காட்சிகள்.










அர்ஜுன் பிரசாத்தாக புதுமுகம் ராணா, கதைக்கு ஏத்தாற்போல் அலட்டிக்கொள்ளாத அமைதியான நடிப்பு. அப்புறம் ரெண்டு ஹீரோயின்ஸ். முதல் பாதியில் வாமணன் பட நாயகி ப்ரியா ஆனந்த். இந்த படத்தில் கலக்கிவிட்டார் ரசிக்கும்படியான குறும்பு நடிப்பு. வாமணன் கேரக்டர்க்கு அப்படியே நேரெதிர், இந்த படத்தில் பேசிக்கொண்டே இருக்கும் CHATTER BOX . இரண்டாம் பாதியில் ரிச்சா (ரிச்சா பல்லோடு இல்லீங்க.. ) , இந்தம்மினி அமெரிக்க இறக்குமதி, செம ஹோம்லி, நடிப்பிலும்(?) கலக்கிட்டாங்க (ஹி ஹி)..


கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு படம்..

பி.கு : குத்துப்பாட்டு, மஞ்சா, பச்சை, செகப்பு சட்டை டூயட்டுகள் இல்லாத தெலுங்கு படம்.



Note: some part of this article taken / copied / referred / linked (or get help)  from the following websites thanks to them:-
machaanblog.blogspot.com
youtube.com
www.gogle.com


 

No comments: