புண்ணாக்கு
30 ரூ அசோலா 30 பைசா - உங்களுடைய தேர்வு எது ?
அசோலா பற்றி
- தமிழில்
மூக்குத்தி மற்றும்
கம்மல் செடி என்று அழைக்கப்படுகிறது.
- பெரணி வகையைச்
சார்ந்த நீரில்
மிதக்கும் தாவரம்.
- மிக மிக சிறிய இலையையும்
துல்லியமான வேர்களையும்
கொண்டவை. தண்டு மற்றும்
வேர்பகுதி நீரினுள்
மூழ்கி இருக்கும்.
- பச்சை அல்லது
இலேசான பழுப்பு
நிறத்தில் இருக்கும்.
- வேகமாக
வளரும் தன்மை கொண்டவை.
அசோலா
|
அசோலா- தீவனமாக
- அசோலாவில்
புரதம், அமினோ அமிலங்கள்,
வைட்டமின்கள், கால்சியம்,
பாஸ்பரஸ், பொட்டசியம்,
இரும்பு, தாமிரம்,
மெக்னீசியம் மற்றும்
வளர்ச்சி ஊக்கிகள்
அதிகம் உள்ளன.
- உலர்ந்த
நிலையிலுள்ள அசோலாவில்
புரத சத்து -
25-35 %, தாதுக்கள் - 10-15% மற்றும்
அமினோ அமிலங்கள்
- 7-10 % உள்ளன.
- அசோலாவின்
செரிக்கும் தன்மை கால்நடைகளில்
மிகவும் நன்றாக
இருக்கிறது.
- அசோலாவை
தனியாகவும் அல்லது
அடர்தீவனத்துடன் கலந்தும்
கால்நடைகளுக்கு கொடுக்கலாம்.
- செம்மறியாடுகள்,
வெள்ளாடுகள், பன்றிகள்,
கோழிகள் மற்றும்
முயல்களுக்கும் தீவனமாக
அளிக்கலாம்.
|
அசோலா உற்பத்தி
- மர நிழல்
உள்ள சுத்தமான,
சமமான இடத்தை
தேர்வு செய்து
கொள்ளவேண்டும்.
- செங்கல்களை
பக்கவாட்டில் அடுக்கி
2 மீ X 2 மீ அளவுள்ள
தொட்டி போல்
அமைத்து கொள்ளவேண்டும்.
- புல்
மற்றும் மர வேர்களின்
வளர்ச்சியை அசோலா
குழியினில் தடுக்க
தொட்டியின் கீழே
உர சாக்கினை
பரப்பி விட வேண்டும்
- அதன்
மேல் சில்பாலின்
பாயை ஒரே சீராக
பரப்பிவிட வேண்டும்.
- சில்பாலின்
பாயின் மீது
10-15 கிலோ சலித்த
செம்மண்ணை சம அளவில்
பரப்பிவிட வேண்டும்.
- புதிய
சாணம் 2 கிலோ
மற்றும் 30 கிராம்
சூப்பர் பாஸ்பேட்டை
10 லிட்டர் நல்ல
தண்ணீரில் கலந்து
ஊற்ற வேண்டும்.
- மேலும்
தண்ணீரை 10 செ.மீ.
உயரம் வரை ஊற்ற
வேண்டும்.
- 500 - 1 கிலோ
அசோலா விதைகளை
அதன் மேல்
தூவி லேசாக
தண்ணீர் தெளிக்கவும்.
- ஒரு வாரத்தில்
அசோலா நன்றாக
வளர்ந்து தொட்டி
முழுவதும் பரவி
இருக்கும்.
- தினமும்
500 கிராம் அசோலா
அறுவடைக்கு புதிய
சாணம் 1கிலோ
மற்றும் 20 கிராம்
சூப்பர் பாஸ்பேட்டு
கலந்த கலவையை
ஒவ்வொரு 5 நாட்களுக்கு
ஒரு முறை
தொட்டில் இடவேண்டும்.
- மெக்னீசியம்,
இரும்பு, தாமிரம்
மற்றும் சல்பர்
கலந்த நுண்ணூட்ட
கலவையை ஒவ்வொரு
வாரத்திற்கு ஒருமுறை
இட்டால் அவை அசோலாவில்
தாது உப்புகளின்
அளவை அதிகரிக்கும்.
- மாதம்
ஒரு முறை
மூன்றில் ஒரு பங்கு
மண்ணை மாற்றி
புதிய மண்ணை
இடவேண்டும்.
- 10 நாட்களுக்கு
ஒரு முறை
மூன்றில் ஒரு பங்கு
தண்ணீரை மாற்றி
புதிய தண்ணீரை
ஊற்ற வேண்டும்.
- அசோலா
விதைகளை தவிர
ஆறு மாத்த்திற்கு
ஒரு முறை
அனைத்து இடு பொருட்களையும்
வெளியேற்றி பின்னர்
புதியதாக இடுபொருட்களை
சுத்தமான சரியான
அளவில் இட்டு
தயார் செய்ய
வேண்டும்.

நன்றாக வளர்ந்த அசோலா
அசோலா உற்பத்திக்கான தொட்டிகள்
அசோலா அறுவடை
- அசோலா
பசுந்தீவனம் 15 நாட்களில்
நல்ல வளர்ச்சி
அடைந்து விடும்.
பின்பு நாள்
ஒன்றுக்கு 500 கிராம்
முதல் 1 கிலோ
வரை அறுவடை
செய்யலாம்.
- ஒரு
சதுர செ.மீ.
ஓட்டை அளவுள்ள
சல்லடையை பயன்படுத்தி
அறுவடை செய்யலாம்.
- அசோலாவை
சுத்தமான தண்ணீரில்
அலசினால் சாணத்தின்
வாசனை இல்லாமல்
இருக்கும்.
|
மாற்று இடுபொருட்கள்
- புதிய
சாணத்திற்க்கு பதிலாக
சாண எரி
வாயு கலனில்
இருந்து வெளியேறும்
சாணத்தை உபயோகப்படுத்தலாம்.
- குளியலறை
மற்றும் மாட்டுகொட்டகையிலிருந்து வெளியேறும்
கழிவு நீரை
அசோலா குழியில்
நிரப்ப பயன்படுத்தலாம்.
நல்ல வளர்ச்சிக்கான சுற்று சுழல் காரணிகள்
- வெப்பநிலை 200 C - 280C
- வெளிச்சம் 50% சூரிய ஒளி
- ஈரப்பதம் 65 - 80%
- தொட்டில் நீரில் உயரம் 5-12 செ.மீ
|
|
|
|
அசோலா உற்பத்தியில் கவனிக்க படவேண்டியவை
- அசோலாவை
சல்லடை கொண்டு
அலசும்போது கிடைக்கும்
நீரில் உள்ள சின்ன சின்ன அசோலா நாற்றுகளை
திரும்ப தொட்டியில்
ஊற்றலாம்.
- தொட்டியில்
உள்ள நீரின்
வெப்பநிலையை 250C கீழே இருக்குமாறு
பார்த்து கொள்ளவேண்டும்.
- நிழல் வலைகளை
உபயோகப்படுத்தி வெளிச்சத்தின்
அளவை குறைக்கலாம்.
- அசோலாவை
தினமும் அறுவடை
செய்து தொட்டியில்
ஏற்படும் இடநெருக்கடியை
குறைக்கலாம்.
|
No comments:
Post a Comment