Saturday, August 24, 2013

நூறு நாள் வேலை திட்டம்… உழுதவன் கணக்குப் பார்த்தால் குவாட்டர் காலி பாட்டில்தான் மிஞ்சும்!!!



     மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம். இயற்கைச் சீற்றங்களான புயல், வறட்சி, பஞ்சம், பட்டினி ஏற்படும்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறைந்தபட்ச வேலைவாய்ப்பையும், கிராமப் பொருளாதார முன்னேற்றம், விவசாய வளர்ச்சி, ஏழை மக்களின் பொருளியல் வளர்ச்சி ஆகியவற்றை  கருத்தில் கொண்டு வகுக்கப்பட்ட திட்டம்  இன்று கிராமப்புற பொருளாதாரம் நசிந்து, மக்களை சோம்பேறிகளாக்கி, விவசாயம் வீழ்ச்சியடைய காரணமாகிவிட்ட கொடுமையை யாரிடம் சொல்லி அழுவது.  பல்வேறு நெருக்கடிக்கிடையில் தாக்கு பிடித்து நடந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டு விவசாயத்தின் மீது இத்திட்டம் பெரும்இடியாக விழுந்துள்ளது.


     இந்த திட்டம் ஏழை மக்களுக்கானது என்பதில் மாற்றம் இல்லை. ஆனால் அரசியல்வாதிகளால் வாக்கு வங்கி திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. வேலை கலாச்சாரம் என்பது வளர்க்கப்படாமல் எல்லாரும் அரசாங்க பணத்தை சாப்பிடுகிறார்கள் நாங்களும் சாப்பிடுவோம் என்ற மன நிலையினை விவசாய தொழிலாளர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறார்கள். எனது  ஊரிலிருந்து தேனி செல்லும் வழியெல்லாம் ஒவ்வொரு ஒரு ஊரின் சாலையோர மர நிழலில் பெரும்  மக்கள் கூட்டம் ஓய்வெடுப்பது  ஒரு தினசரி காட்சியாகிவிட்டது. வேலைக்கு   நடுவே ஓய்வா  அல்லது ஓய்வுக்கு நடுவே சிறிது வேலையா என்று பட்டிமன்றம் நடத்தலாம்.       

     ஏரி, குளம் தூர் வாருதல், நீர் வழித்தடங்களை புணரமைப்பு செய்தல், புதிய பண்ணைக் குட்டைகள் அமைத்தல், வனவளத்தைப் பெருக்கும் வகையில் மரக்கன்று நடுதல், கிராமப்புற பகுதிகளில் புதிய சாலைகள் அமைத்தல், பழைய சாலைகள் செப்பணிடுதல், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் நிலங்கள் மற்றும் விவசாயம் மேம்பட அவர்களின் நிலங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்றிருந்தாலும் நடைமுறையில் எங்கும் அந்த அதிசயம் நிகழவேயில்லை. தம்முடைய நிலங்களில் 100நாள் வேலைத்திட்டப் பணிகள் வருகிறது என்பது கூட தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கு தெரியாது. தெரிவிக்கப்படவுமில்லை. இந்த திட்டம் ஒழுங்காக செயல் பட்டு இருந்தால் இந்நேரம் நாட்டில் உள்ள கால்வாய்கள் , குளங்கள், நீர்நிலைகள் எல்லாம் தூர் வாரபட்டிருக்கும்ஆழப்படுத்த பட்டிருக்கும்புது குளங்கள் வெட்டி இருக்கலாம் அது விவசாய அபிவிருத்திக்கு உதவியாக இருந்திருக்கும்.


         இத்திட்டத்தினை அமுல் படுத்திட வேண்டிய துறையில் போதிய ஊழியர் கட்டமைப்பு இல்லாமல் திட்டத்தினை செயல்படுத்திடவும் மக்களை பன்படுத்திடவும் இயலாமல் இத் துறை ஊழியர்கள் தவிக்கும் நிலை உள்ளது. இத்திட்டம் சில மாநிலங்களில் சிறப்பாகச் செயல்படுகிறது ie:- கேரளாவில் இத்திட்டத்தில் விவசாயமும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் இத்திட்டத்தில் விவசாயம் சேர்க்கப்படவில்லை.  


     விவசாய பணிகள் நடைபெறாதக் காலக்கட்டங்களிலும், வறட்சிச் சூழலிலும் மராமத்துப் பணிக்கு ஏற்ற கோடைக்காலங்களிலும் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டால் நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். ஆண்டுமுழுவதும் சராசரி 100 நாள் வேலை என்றால் எல்லாம் பாழாகிவிடுகிறது. உழைத்து உரமேறிப்போன மக்கள் சமூகம் உழைக்காமலேயே ஊதியம் பெறுவதை பெருமையாகக் கருதும் நிலைக்கு இன்றைய ஆட்சியாளர்கள் அவர்களை உருவாக்கிவிட்டார்கள். சோழ வள நாடு சோறுடைத்து என்று கொண்டாடப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் இன்று கூலியுடன், "குவார்ட்டர்' மது பாட்டிலும் கொடுத்தால் தான் கூலியாட்கள் வேலைக்கு வரும் நிலை, இதுவும் 100 நாள் வேலைத் திட்டத்தின்   பிரதிபலிப்பே.   இன்றைய சுழலில் உழுதவன் கணக்குப் பார்த்தால் குவாரட்டர் காலி பாட்டில்தான் மிச்சமாகும்!!!


      ஆனால், இன்றும் எங்கள்  பண்ணயத்தில் வேலை செய்ய சிறிய அளவில் விவசாய தொழிலாளர்கள் கிடைக்க காரணம், அவர்களின் நேர்மையான நெறிமுறைகள்தான் அவை:

1. இத்துணை அண்டுகள் தங்கள் வாழ்வாதாரமாக விளங்கிய வேளாண்மைத் துறையின் மீதுள்ள பற்றுதலும்.

2. வேலையே செய்யாமல், அல்லது குறைத்து செய்து, நிறைய செய்தது போல் காண்பித்து சம்பளம் வாங்க வேண்டும் என்ற குணம் இல்லாததும்.

3. இதுபோன்ற   திட்டங்கல்  ஒரு நிரந்தர வாழ்வாதாரமாக இருக்காது என்ற யதார்த்தத்தை அவர்கள் உணர்ததும்தான்.

4. இன்றைய சூழலில் விவசாயதுறையில்  கிடைக்கும்  உழைபிட்கேற்ற  சம்பளமும்தான்.  

பல ஆண்டுகளாக எங்கள் பண்ணயத்தில் விவசாய வேலைக்கு உறுதுணையாக இருக்கும் விவசாய தொழிலாளர்கள் மற்றும் கங்காணி திரு பாண்டி & திருமதி நாச்சம்மால் அவர்களுக்கும் நன்றிக் கடன் பட்டுள்ளது எங்கல்  குடும்பம் மட்டுமல்ல  அவர்களின் வியர்வயில் விளைந்த ஒவ்வொரு ஒரு உணவு பொருளை உண்ட அனைவரும்  நன்றிக் கடன் பட்டவர்களே!!!!!!!!!....

- கோவிந்தராஜ்.
Some lines from:- ( thanks to them)
http://puthiyathalaimurai.tv
http://www.keetru.com
Google translate ( for type in Tamil)

No comments: