2004 இல் ஒரு குளிர்காலம் மதுரையில் ஒரு மன்னார் அண்ட் கம்பெனியால் ஏமாற்றப்பட்டு நானும், பாரதியும் பெரும் மணக்கவலையில் இருந்த நேரம், வாழ்க்கையில் விரக்த்தியா!! தொடர் தோல்விய!! தாவூத் சென்னை வர்ரார் அவர்கிட்ட சேருங்க என ஜெமினி படத்தில் வையாபுரி ஆள்
சேர்ப்பது போல. எங்களுக்கும் ஒரு அழைப்பு வந்தது எங்கள் கல்லுரி நண்பன் ராம்கு
மாரிடமிருந்து, நான்பா பஞ்சாப் அம்ரித்சர்ல இருந்து பேசுறேன்டா, மச்சி இங்க ப்ரோ-இ (PRO-E) படிக்கிறேன், இந்த பயிற்சி கல்லூரிக்கு என் பெரியப்பா தான் முதல்வர், பயிற்சி முடித்ததும் அவரே நல்ல வேலையும் ஏற்பாடு செய்வார், மேலும் நீங்கள் வந்தாலும் உங்களுக்கும் பயிற்சி கட்டண தள்ளுபடியும், வேலையும் நிச்சயம். மேலும் கானா கார்த்தி, நாச்சி & சரவணன் ஏற்கனவே வந்துவிட்டார்கள் நாங்கல் இங்கு பயிற்சி கல்லூரி விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளோம்
என பல தவல்களையும், வெற்றி நிச்சயம் இது வேத
சத்தியம் கொள்கை வெல்வதே நான் பஞ்சாப் வந்த லட்சியம் , அடே நண்பா உண்மை சொல்வேன் பஞ்சாப் வந்தால்
வேலை வாங்கி தருவேன் என சொல்ல நாங்கலும் பெட்டியை கட்டிவிட்டோம்.
எங்களது
வீட்டில் இன்னும் எங்கள் மீதிருந்த நம்பிக்கை குறையாததால் ரூ.30,000 கொடுத்து வழியனுப்பி
வைத்தனர். முதலில் நாங்கல் மதுரைக்கு சென்றோம். அங்கு பாரதியின் அக்கா& மாமா வீட்டில் ஒரு நாள் தங்கி மறுநாள் பாரதியின். அம்மா, அப்பா
, அக்கா மாமா மேலும் பல உறவினர்கள் என பெரும்
படைசூல நாங்கல் மதுரை ரயில் நிலையத்திலிருந்து எங்கள் முதல் நெடுந்தூர பயணத்தை
தொடங்கினோம். இதற்குமுன்னர் மதுரை டு அண்டிபட்டி
மீட்டார் கேஜி ரயிலில் மட்டுமே பயன்பட்ட எங்களுக்கு இந்த சம்பர்க் கிரந்தி எக்ஸ்பிரஸ் அதிசயமாஹவே இருந்தது. அத்துணை தூய்மை
& அந்த மொத்த ரயில் பெட்டிக்கும் (S3 கோச்) நாங்கல் இருவர்மட்டுமே, அப்போதுதான் எங்களுக்கு
தெரிந்தது இன்று முதல்முறையாய் நெடுந்தூர பயணத்தை தொடங்குவது நாங்கல் மட்டுமல்ல சம்பர்க்
கிரந்தி எக்ஸ்பிரஸும்தான்.
ரயில் இரவு 11:55 மணிக்கு பயணத்தை தொடங்கியது, பல கணவுகளுடன்
நித்ராதேவி எங்களை ஆட்கொண்டாள், மறுநாள் காலை
சென்னை எக்மோர் வந்ததும் எழுந்து காலையுணவு நங்கள் கொண்டுவந்த புளியோதரை மேலும் மதிய
உணவு அதே புளியோதரை (3:00 PM @விஜயவாட ஜங்ஷன்), சென்னையில் ஏறிய இரண்டு இராணுவ வீரர்களுடன் சிறிது பேச்சு என நேரம்போனது,
விஜயவாட ஜங்ஷணை கடத்தும் முன்று திருநங்கைகள்
வந்தார்கள் எங்கே / எப்படி ஏறினாகள் எண்று தெரியவில்லை அவர்களது தொனியில் பேசி,நாணி,கோணி,
கைதட்டி ஆளுக்கு ஐய்ந்து ருபாய் வசூல் செய்துகொண்டு சென்றார்கள். மறுநாள் காலை போபால்
ஜங்ஷனில் காலையுணவு ( போபால் ஸ்பெசல் பூரி சன்னா), மதியம் ரயில் பேன்டிறி தாளி. மற்றும் வறட்சியும் செழுமையும் கலந் து கண்முன்னால் விரிந்த இந்தியாவின் வடமாநிலங்களின் காட்சிகளை
கண்டவாறு அன்று மாலை டெல்லி நிசாமுதின் ரயில்வே
ஜங்ஷனில் இறங்கினோம்.
எங்களது அடுத்த ரயில் மறுநாள் காலை என்பதால் நாங்கள் இரவு பாரதி
சித்தப்பா வீட்டில் தங்க ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்தோம். அதன்படி அவர் வீட்டில் அன்றிரவு உண்டு உறங்கி மறுநாள் அதிகாலையிலேயே எங்கள் தில்லி to அமிர்தசரஸ் பயணம்
பச்சிம் எக்ஸ்பிரஸுடன் துவங்கியது. கொடுமை, உடன் பயணம் செய்யும் பயணிகள் பேசுவது எங்களுக்கும், நாங்கல் பேசுவது அவர்களுக்கும்
சுத்தமாக புரியவில்லை. சிலைமாதிரி அமரர்ந்துகொண்டு மாலை 4:30க்கு அமிர்தசரஸ் ஜங்ஷனை
அடைந்தோம்.
பிளாட்பாரத்தில் காலை வைத்ததும் நண்பா! நண்பா!! நண்பா!!! என்று அலைத்துகொண்டு எங்கள் நண்பன் ராம்குமார் ஓடிவருவதைக் கண்டு எங்கள் மணம் அலைகள் ஓய்வதில்லை தீம் மியூசிக் வசித்து. வழக்கமான நலம் விசாரிப்புகள் கடந்தபின் தான் கவனித்தேன் கானா கார்த்தி, நாச்சி & சரவணன் ஆகியோர் மெதுவாக எங்களை நோக்கி வருவதை பார்த்தோம், முகத்தில் ஒரு சோகம் எங்கள் மீது ஒரு அனுதாப பார்வை ஒருநிமிடம் நெஞ்சில் எதோ ஒரு நெருடல். பின்பு சஹாஜமான பேச்சுக்களால் மிண்டும் கல்லூரி நாள் உட்சாகதுடன் ஆட்டோ பிடித்து பயிற்சி கல்லூரி விருந்தினர் மாளிகை நோக்கி பயணப்பட்டோம், கார்த்தியிடம் " மச்சி வாழ்க்கை எப்படியிருக்கு & கல்லூரி & ரூம் எப்படியிருக்கு என்று கேட்டேன், நீயே பார்த்து தெரிஞ்சிக்கோ" அப்படின்னு சொல்லிட்டான். நானும் சரி பையன் கொழப்பத்துலயிருக்கான் அப்பிடின்னு விட்டுடன்.

CIPET அம்ரித்சர் நல்ல பெரிய பயிற்சி கல்லூரிதான் சரி நாம ப்ரோ-இ படிச்சி இங்கயே பெரிய வேலையில் செந்துரனும்-ன்னு யோசிச்கிட்டே விருந்தினர் மாளிகை நோக்கி நடந்தோம், கல்லூரியை கடந்து சிறிது தூரம் சென்றதும் ராம்குமார் ஒரு பாலடைந்த கட்டிடத்தின் பின்னால் சென்றதும் சரி குளிர் ஜாஸ்தில அதன் பையன் பிஸ் அடிக்கத்தான் போறான் என்று நாங்கள் நின்றுவிட்டோம் உடனே ராம்குமார் என்னமாச்சி நின்னுடிங்க என கேட்க மச்சி எங்களுக்கு வரல நீ போய்டுவா என நாங்கல் சொல்ல, மச்சி நம்ம இங்கதான் தங்கபோறோம் அப்பிடின்னு சொல்ல தலை சுற்றியது...
ஏற்கனவே நொந்து நுடூல்ஸ்ஸாகி அம்ரித்சர் வந்த காரனத்தால், விதியை
நொந்துகொண்டு பேய்கள்கூட தங்க பயப்படும் எந்தநேரத்திலும் இடித்துவிடும் என்ற நிலையில்
இருந்த அந்த பேய்கள்கூட கைவிட்ட கட்டிடத்தில் உருப்படியான ஒரே கடைசி அறையில் தங்கினோம்.
ஒரு பெரிய கட்டில், ஒரு ஹீட்டர் இரண்டு கம்பலிகள்
இதுதான் அந்த விருந்தினர் மாளிகையின் சிறப்புகள். அன்று இரவே ரம்குமருடைய பெரியப்பாவை
அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். அவர் கேட்ட முதல் கேள்வி “சீப்பெட் தலைமை அலுவலகம்
&பயிற்சி மையம் 400 கிமீ - இல் சென்னையில்
இருக்க . 4000 கிமீ தாண்டி நீங்கள் பஞ்சாப்
வந்து ஏன்?” உடனடியாக ராம்குமார் இல்ல பெரியப்பா இவங்க இங்க கோர்ஸும் பண்ணலாம்
மேலும் இங்குள்ள மாறுபட்ட கலாச்சாரத்தையும் பார்க்கலாம் அதன் இங்க வந்திருகாங்க என்று சொன்னபோது எங்களுக்கு தூக்கி வாரிபோட்டது.
ஒருவழியாக ரம்குமருடைய பெரியப்பா தயவினால் பயிற்சி கட்டணம் குறைக்கப்பட்டது.
நாங்கள் வெளியே வந்தவுடன், டாய் நாங்க எங்கட இங்குள்ள மாறுபட்ட கலாச்சாரத்தை பார்க்கவாவந்தோம்,
இங்க ப்ரோ-இ -க்கு நல்ல மதிப்பு உடனடி வேலை, எங்க பெரியப்பவே ஏற்பாடு பண்ணுவார் அப்பிடின்னு சொல்லிதானே இங்க கூப்பிடய் என கேட்க, விடுமாச்சி நல்லது செய்தாள் கெட்ட பெயர்தான்
கிடைக்கும் என சொகமான முகத்துடன் சொல்ல 'ஆஹா, சனியன் ஜடை போட ஆரம்பிச்சிடுச்சே, இனி
பூ வச்சி போட்டு வைக்காம விடதேன்னு' எங்க விதிய நோந்துகிட்டோம். பின்பு நாச்சி சொன்னான்
" மச்சி ராம்குமார் தனிமையை போக்க கிடைத்த அடிமைகள்தான் நாம்" மேலும் சரவணன்
" என்னடா மச்சி, நீங்க வரிங்கன்னு அவன் எங்களுக்கு இன்னைக்கு காலையில்தான் சொன்னான்
, நீங்களாவது ஒரு கால் பன்னியிருக்கலாமே என
கேட்க்க" என்னத்த சொல்ல பஞ்ஜாப்பை ராம்குமார் மூலமா பக்கனுமுன்னு இருக்கும்போது என்ன செய்ய..
நிற்க. இப்படி நான் ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தால், ஏதோ கே.பாக்யராஜின் 'சுவர் இல்லாத சித்திரங்கள்' படம் ஓட்டுவது போல ஆகிவிடும். அதனால் சுருக்கமாக சொல்லி முடித்து கொள்கிறேன். ப்ரோ-இ எங்கள் வழ்வில் பெரிய அளவில் கைகொடுக்கவிட்டலும், ராம்குமார் தயவால் கீழ் காணும் இடங்களை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது:-
1918ஆம் ஆண்டு வெள்ளையர் ஆட்சி, ரெளலட் சட்டம் என்கின்ற ஒரு அடக்குமுறை சட்டத்தை நடைமுறைப்படுத்தி, எந்தவொரு அரசியல்வாதியையும் எவ்வித காரணமும் காட்டாமல் விசாரணை ஏதும் நடத்தாமல் கைது செய்யவும், சிறையில் அடைக்கவும் காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.பஞ்சாப் மாகாணத்தில் ராணுவச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதியன்று ஜெனரல் டையர் என்ற வெள்ளைய அதிகாரி எந்தப் பொதுக் கூட்டமும் நடத்தக் கூடாது என்றும் மக்கள் எங்கும் கூடக் கூடாது என்றும் ஒரு உத்தரவு பிறப்பித்தார்.
மறுநாள் அறுவடை விழாவைக் கொண்டாட ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். எல்லா பக்கத்திலும் பெரும் மதில் சுவர்களால் சூழப்பட்ட அந்த மைதானத்திற்குள் பல்லாயிரக்கணக்கான மக்கள் அமைதியாக திரண்டிருந்த நிலையில் தனது படையினருடனும், ஆயுதங்களுடன் நுழைந்த ஜெனரல் டையர் அந்த மைதானத்தில் இருந்து வெளியேறும் அனைத்துக் கதவுகளையும் மூடிவிட்டு அங்கிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார். தங்களிடம் இருந்த தோட்டாக்கள் அனைத்தும் தீரும் வரை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
ஆயுதங்கள் ஏதுமின்றி குழந்தைகளும், பெண்களும், பெரியோர்களுமாக திரண்டிருந்த மக்களின் மீது நடத்தப்பட்ட இந்த காட்டுமிராண்டித்தனத்தில் 1,700 பேர் உயிரிழந்தனர்.( from http://tamil.webdunia.com)
சிறு பருவத்தில் படிக்கும்போது ஏற்படாத
ஒரு துயரம் அந்த இடத்தை
பார்க்கும்போது எட்பட்டது.

' கர்பானி கீர்த்தன் ' என்ற பஜனைப் பாட்டு, ஸ்ரீ ஹரிமந்திர் சாஹிப் பொற்கோயிலின் கதவு திறந்ததிலிருந்து, இரவு மூடும் வரை இடைவிடாது ஒலித்துக் கொண்டேயிருக்கிறது . சீக்கியர்களின் வேதப் புத்தகமான ' ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்' பை சகல மரியாதைகளுடன் பல்லக்கில் வைத்து, எல்லோரும் புடைசூழ, ' அகாலி தக்த் ' என்ற மேடையை சுத்தம் செய்து, விரிப்புகள் விரித்து சிறிய கட்டிலில் அமர்த்தி வைக்கிறார்கள் . பின்னணியில், குர்பானி பாட்டு, பஜனை ஒலிக்கிறது . ஒரு சீக்கியர், நாம் தரும் காணிக்கை பணத்தை வாங்கிக் கொண்டு நமக்கு சர்க்கரைக் கட்டி, படம், புத்தகம் ஆகியவைகளை பிரசாதமாக அளிக்கிறார் . படி ஏறி மேலே செல்லும்போது, ஆண் பெண் அனைவரும் கட்டாயம் தலையை மூடிக் கொண்டிருக்க வேண்டும் . நுழையும்போதே மஞ்சள் கைக்குட்டைத் துணிகள் ஆண்களுக்கு அளிக்கப்படுகிறது . பெண்கள் புடவைத் தலைப்பாலோ, துப்பட்டாவினாலோ தலையை முக்காடு போட்டு மூடிக் கொண்டுதான் உள்ளே செல்ல வேண்டும் . அங்கு,ஏழை, பணக்காரன் எல்லோரும் சரிசமமாக அமர்ந்து சாப்பிடும் ' குரு கா லங்கர் ' என்ற லங்கரில் ( சமையற்கூடத்தில் ) சராசரியாக 50,000 பேருக்கு மேல் ஒவ்வொரு நாளும் உணவருந்துகிறார்கள் . தட்டுகள், கிண்ணங்கள், சாப்பிடும் இடம் எல்லாமே மிக மிக சுத்தமாக இருக்கிறது . இத்தனை ஆயிரம் மக்கள் சாப்பிட்ட சுவடே தெரியாமல் உடனுக்குடன் சுத்தம் செய்யப்பட்டுவிடுகிறது . எல்லாமே ஃப்ரீதான் . முகலாய மன்னர் அக்பர் பாதுஷாவே இந்த லங்கரில் மக்களோடு மக்களாய் அமர்ந்து உணவருந்தி இருக்கிறாராம் .
--- சாருஸ்ரீ , குமுதம் சிநேகிதி . டிசம்பர் 1 - 15 , 2010
வாகா பார்டர் என்று அழைக்கப்படும்
இந்த ராணுவ எல்லை வாசற்பகுதி
இந்தியாவிலுள்ள பஞ்சாப் மாநிலத்தின் அம்ரித்ஸர்
நகரத்தையும், பாகிஸ்தான் நாட்டிலுள்ள பஞ்சாப் மாநிலத்தின் லாகூர்
நகரத்தையும் இணைக்கிறது.
இரண்டு நாடுகளையும் இணைக்கும் ஒரே ஒரு நெடுஞ்சாலையின்
வாசற்பகுதியாக இந்த வாகா பார்டர்
அமைந்துள்ளது. இந்த வாசற்பகுதியின் இருபுறத்திலும்
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்குரிய அலுவலக
கட்டிடங்கள், சோதனைச்சாவடிகள், தடுப்பு அமைப்புகள் போன்றவற்றை
இங்கு காணலாம்.
ஸ்வர்ணஜயந்தி என்று அழைக்கப்படும் இந்த
எல்லை வாசலைச்சுற்றிலும் பசுமையான அழகான சூழல் காணப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் சடங்கு நிகழ்ச்சி
போன்று இந்த எல்லை வாயிலில்
நடத்தப்படும் ராணுவ காவல் அணிவகுப்பை
காண்பதற்காகவே பயணிகளும் உள்ளூர் மக்களும் இந்த
ஸ்தலத்துக்கு ஆர்வத்துடன் வருகை தருகின்றனர்.
அதாவது, இந்தியா மற்றும் பாகிஸ்தான்
ராணுவ காவல் வீரர்கள் தினமும்
மாலை நேரத்தில் முரசு மற்றும் ஊதுகுழல்
கருவிகளின் பின்னணி இசையுடன் அணிவகுப்பு
நிகழ்ச்சி ஒன்றை விரிவாக அரை
மணி நேரத்துக்கு நடத்துகின்றனர்.
பார்வையாளர்களின் உற்சாக கையொலி மற்றும்
வாத்திய ஒலிகளோடு உணர்ச்சிகரமான ஒரு அற்புதக்காட்சியாக இந்த
அணிவகுப்பு சடங்கு தினமும் இரு
நாட்டு ராணுவ வீர்களின் ஒத்திசைவோடு
நடத்தப்படுகிறது.
இந்த காட்சியை ஒரு முறை நேரில்
பார்க்கும் இரு நாட்டு குடிமக்களுக்கும்
பரஸ்பர பகையுணர்வு மனதில் தோன்றவே தோன்றாது
என்பதுதான் உண்மை.
பின் எங்கிருந்து முளைக்கிறது எல்லைப்பகை என்பது விந்தையிலும் விந்தை.
தேசிய உணர்வு கொண்டவர்கள் அம்ரித்ஸர்
நகரத்துக்கு வரும்போது தவறாமல் தரிசிக்க வேண்டிய
ஒரு காட்சி இந்த வாகா
பார்டர் ராணுவ அணிவகுப்பு.
இதுபோல் இன்னூம் பல இடங்களை கண்டும், பல மாறுபட்ட உணவுகளை உண்டும், உறையும் பனியில் உலவியும், வாரம் ஒருமுறை குளித்தும் (ரெம்ப குளிருப்பா),
100 ருபாய் வாடகை டிவி&\டிவிடியில் வாரம் ஒருமுறை ஆங்கில மற்றும் ஹிந்தி திரைப்படங்களை பார்த்தும் (மொழி புரியாடியும் வேறு வழி!!!) 40 நாட்கள் கடத்தி ஊர்வந்து சேர்த்தோம்.
எழுத இன்னும் நிறைய இருக்கு ஆனால் .........
"அட பொதும்பா என நீங்கல் கத்துவது எனக்கு புரிவதால்" 400 கிமீ இல் கிடைக்கும் ஒண்றை 4000 கிமீ கடத்து தேடிய எங்கள் வாழ்கையை வசிப்பவரின் காலத்தின் அருமை கருதி இத்துடன் - பாரதிராஜா வரிகளுடன் நிறைவு செய்கிறேன்.
"சில நிர்ணயங்களுக்குள் வாழ்வது ஒரு வாழ்க்கை..
சில நியதிகளை மீறி வாழ்வதும் ஒரு வாழ்க்கை..
மீறிய இவர்கள்... "புதிய வார்ப்புகள்"
நன்றி,
உங்கள் அன்புக்குரிய நண்பன்.
கோவிந்தராஜ்
இந்த கட்டுரை யாரையும் குற்றம்சொல்லவோ,
மனதை புண்படுத்தவோ, கிண்டல் செய்யவோ இல்லை, எதோ 10 அண்டுகளுக்கு முந்தய நினைவுகள்... மிக சில தவல்கள் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது,
அனைத்து படங்களும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன்.சொற் பிழை அல்லது எழுத்துப்பிழைகள்/ தகவல் பிழைகள் இருந்தால் மன்னித்து தயவுசெய்து எனக்கு தெரியப்படுத்துங்கள்.