எப்போதும் நம் நோக்கம் - விண்ணை தொட வேண்டும் என்று இருந்தால் தான் மலை உச்சியையாவது அடைய முடியும் என்பதுபோல, என் சிறுவயதில் நான் ஒரு விஞ்ஞானி ஆகவேண்டும் என்ற நோக்கம்தான் இன்று என்னை ஒரு பொறியாளன் ஆக்கிஇருக்கிறது. அன்று எனக்கு அறிவியல் மற்றும் பொறியியல் மீது காதல் கொள்ள ஒரு பெரிய காரணியாய் இருந்தது “துளிர்” - சிறுவர் அறிவியல் சஞ்சிகைதான்.
தேனி - வெங்கடசலபுரம் திரு. வ.வே மேல்நிலை பள்ளியில் நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் காலம்(1994-95). தலைமை ஆசிரியரின் சுற்றறிக்கையின்படி மதியம் 2 மணிக்கு நாங்கள் (மாணவர்கள்) எல்லாரும் தலைமை அலுவலகத்தின் முகப்பில் அமைந்த மேடையின் முன்பு உடல் கல்வி பயிற்சி வகுப்பிற்கு இப்படி சங்கு ஊதி விட்டார்கலே என்று வருத்தமாக அமர்ந்த்திருந்தோம். அப்போது எங்கள் அறிவியல் ஆசான் முன்னுரையாற்றினார், பின்பு தமிழ்நாடு அறிவியல் இயக்கதின் தலைவர் அறிவியல் தேவையைக் குறித்து பேசினார் மேலும் இன்றைய சமூகத்தில் நகர மத்தியதர வர்க்கம் தமது பிள்ளைகள் விரைவில் வருமானம் ஈட்டக்கூடிய கல்வியை பெறவேண்டும் என்று தான் பார்க்கிறார்கள் அதனால் நகர்புறங்களிலிருந்து விஞ்ஞானிகள் கிடைக்கமாட்டர்கள் உங்கலைபோன்ற கிராமபுற மாணவர்களைத்தான் எதிர்கால இத்திய விஞ்ஞான உலகம் நம்பியிருகிறது என்றும். மலையில் பிறந்து நதியில் தவழ்ந்து கடலை வந்தடயும் அருவி போல... அறிவியலை கிராமபுற மாணவர்களுக்கும் கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்கோடு “துளிர்” சிறுவர்களுக்காக அறிவியல் மாத இதழ் நடத்தப்படுவதாகவும். வருட சாந்த ரூ.50 செலுத்தி நீங்கள் துளிரை தபால் மூலம் பெற முடியும் என்றும் கூறினார்.

நாங்கள் கோளரங்கம் உள்ளே நுழைந்து அமர்த்தும்.
அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு.
ப்ரொஜெக்டர் மூலம் அரைக்கோள வடிவிருந்த கோளரங்க உட்புற திரையில் சூரிய குடும்பத்தைப் பற்றியும், நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் கூட்டங்கள்
& சூரியன், சந்திரன் நகரும் முறை,
இரவும் பகலும் எப்படி ஏற்படுகிறது மேலும் பல்வேறு பருவங்களில் மற்றும் பல்வேறு உலக கோணங்களிலும் இரவு வானத்தை பார்த்தால் எப்படி இருக்கும் என பார்த்த பல கட்சிகள் ஆச்சிரியத்தை ஏற்படுத்த,
அமைப்பாளர் விலக்கத்திணூடே இன்னும் இதுபோல பல தகவல்கள் துளிர் மாத இதழில் நீங்கள் படிக்கலாம் என்று சொன்னபோதே முடிவு செய்துவிட்டேன் எப்படியும் துளிர் வாங்குவதென்று.

பெரும்பாலும் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர் (6,7,8 வகுப்பு மாணவ மாணவியர்) புரிந்து கொள்ளும் இதழாகவே துளிர் தயாரிக்கப் படுகிறது. துளிர் வாசகர்களாக சிறுவர் சிறுமியர் மட்டும் இல்லை. துளிரை அவர்களுக்கு எடுத்துச் செல்லும் ஆசிரியர்கள், அறிவியல் இயக்க ஆர்வலர்கள், முகவர்கள், பெற்றோர்கள் என்று துளிருக்கு ஒரு விரிவடைந்த வாசகர் வட்டம் உள்ளது.
தமிழில் ஏராளமான சிற்றிதழ்கள் வெளிவருகின்றன, அவைகள் பெரும்பாலும் இலக்கிய இதழ்கள் தவிற தொழிற்சங்கம், மத நிறுவனக்கள் வெளியிடுகிற பத்திரிக்கைகள் வருகின்றன, சில சிற்றிதழ்களின் ஆயுள் ஒரு வருடம் கூட தாக்குப்பிடிக்காமல் நின்றுபோனது என்று அந்த துறையில் இருக்கிறவர்கள் சொல்கிறார்கள். பத்திரிக்கை நடத்துவது என்பது எளிதான் காரியமல்ல அதுவும் விளம்ப்ரம் பெறாமல் இலாப நோக்கு இல்லாமல் தன்னார்வமாக சேவை போல செய்கிறார்கள். அதில் ‘துளிர்’ மாத இதழ் 26 ஆண்டுகளாக நிதி நெருக்கடிகளை சந்தித்தபோதும் மாதம் தவறாமல் மாணவர்களிடம் அறிவியல் சிந்தனைகளை கொண்டுசெல்வற்காக நெடிய பயணம் செய்திருக்கிறார்கள். அதை ஏற்று நடத்துவது தமிழ்நாடு அறிவியல் இயக்கம். அவர்களுடைய சமூகமுன்னேற்றதிற்கான பணிக்கு பாராட்டு என்று ஒரு வரியில் முடிக்கமுடியாது, தினமும் செய்திகளை வாசித்துவிட்டு எங்கும் ஊழல், லஞ்சம் அரசியல்வாதிகள் முதல் அதிகாரி, கடைநிலை அரசாங்க குமாஸ்தா வரை பழித்துவிட்டு தன்வேலை தானுண்டு என்பவர்கள் மத்தியில் அறிவியலை சமூகத்திர்கு கொண்டு செல்லவேண்டும், மக்கள் மூட நம்பிக்கைகளைலிருந்து விடுபடவெண்டும் என்று தங்களுடைய நேரத்தையும் வருமானத்தையும் சிந்தனையும் சமூகத்திற்கு செலவுசெய்கிறவர்களை ப் பார்க்கும்போது நாம் என்ன செய்தோம் என்ற குற்றவுணர்வு ஏற்படுகிறது.
விளம்பரம் இல்லாமல் ஒரு ஊடகம் கிடையாது,
சிற்றிதழ்கள், சில அரசியல் தத்துவார்த்த இதழ்களைத் தவிர வெகுஜன் ஊடகங்கள் என்று சொல்லபடும் எல்லா ஊடகங்களும் வாசகர்களை நம்பி தொழில் நடத்தவில்லை,
பல பத்தாண்டுகளுக்கு முன்பு தினமணி யின் ஆசிரியர் ஏ.என்.சிவராமன் சொன்னாராம்,
மூதாதையரின் செலவங்களை சிலர் சூதாடி அழித்தனர்,
சிலர் குடித்து அழித்தனர் நாங்கள் பத்திரிக்கை நடத்தி அழிக்கிறோம் என்றாராம்.
நிறைய சிற்றிதழ்களுக்கு ஆயுள் சந்தா கட்டியவர்கள் அது அதன் ஆயுள் அற்பமாக போவதைப் பார்த்திருக்கிறார்கள்.
பாடப்புத்தகதன்மையற்ற படைப்புகளை வெளியிடுவதில் துளிர் அதிக கவனம் செலுத்துகிறது. குழந்தைகள் அறிவியலை தங்கள் சூழலோடு ஒன்றிப் பார்த்து புரிந்து கொள்ளவும், அவர்களே அறிவியலைச் செய்து பார்த்துக் கற்றுக் கொள்ளவும் துளிர் ஊன்றுகோலாக இருந்து செயல்படுகிறது. குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்க்கும் விதமான படைப்புகளும் (கதை, புதிர்கள்) துளிரில் வெளிவருகிறது. துளிர் இதழில் கேள்வி பதிலாக வந்ததை தொகுத்து சிறு நூலாக எதனாலே?
எதனாலே? என்ற நூலை அறிவியல் வெளியீடு வெளியிட்டிருந்தது,
அதிலிருந்த கேள்வி பதிலகள் சிறுவர்களுக்கு என்று ஒதுக்கமுடியாது,
பெரும்பாலான கேள்விகளுக்கு விடை பெரியவர்களுக்கே தெரியாது...
நண்பர்களே தயவு செய்து சந்தா செலுத்தி துளிர் அறிவியல் சஞ்சிகையை வாங்குங்கள்
,மாணவர்களுக்கு / உங்கள் குழந்தைகளுக்கு பரிசளிக்க இந்த புத்தகத்தைவிட சிறந்தது ஏதுமில்லை.
மேன்மேலும் மக்களிடம் அறிவியல் சிந்தனைகளை எளிய தமிழில் கொண்டு செல்லும் துளிர் இதழுக்கும் அதன் ஆசிரியர் குழுவிற்கும் வாழ்த்துக்கள்.
துளிர் தொடர்பு முகவரி:
நன்றி,
உங்கள் அன்புக்குரிய நண்பன்.
கோவிந்தராஜ்
குறிப்பு: சில தகவல்களும்
அனைத்து படங்களும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன்.சொற் பிழை அல்லது எழுத்துப்பிழைகள்/ தகவல் பிழைகள் இருந்தால் மன்னித்து தயவுசெய்து எனக்கு தெரியப்படுத்துங்கள்.